
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முக்காட்டைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள்(யாரென) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். (33:59)
இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்றும் தெரிய வேண்டியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். (24:31)
இஸ்லாம் பெண்களுக்கு “ஹிஜாப்” என்ற பர்தா முறையைக் கடமையாக்கியிருக்கிறது. அதன் மூலம் தங்களின் கற்பைக் காத்துக் கொள்ள ஏவுகிறது.
ஆனால் பெண்களில் சிலர் இந்த விதியை பின்பற்றியும் பின்பற்றாமலும் இருக்கிறார்கள், சிலர் புர்கா அணிகிறோம் என்ற போர்வையில்மெல்லியபுர்க்காக்களை அணிகிறார்கள்.
சிலர் புர்கா அணிந்தும் தலையில் ஒழுங்காக சால் இல்லாமல் செல்கிறார்கள். அவர்களுடைய தலை முடி வெளியே தெரிகிறது. அவர்கள் சூடி இருக்கின்ற பூக்கள் வெளியே தெரிகின்றது.
சிலர் டைட்டாக இருக்கமாக புர்கா அனிகிறார்கள். இவைகளெல்லாம் ஆடம்பரமாக இருக்கின்ற புர்காக்களில் காணப்படுகிறது.
விலை உயர்ந்த புர்காகளை அனிவதில் தவறில்லை, ஆனால் அவைகள் மேற் சொன்ன குறைகள் உள்ளதாக இருக்ககூடாது.