உலகில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படும் ஒரு தினம்டிசம்பர் 25.
இயேசு கிறிஸ்து (ஈசா அலை) அவர்கள் டிசம்பர் 25ம் திகதி பிறந்தார் என்றஒருதவறான நம்பிக்கை, ஆனால் அதனை கிறிஸ்தவர்கள் புதிய, புத்தாண்டுகொண்டாட்டமாக அறிமுகப்படுத்தி கொண்டாடி வருகின்றனர்.
உண்மையில் பைபிளின் பக்கங்களை ஒரு தடவைக்கு பல தடவை புறட்டிபடிக்கின்ற போது அதன் உண்மையை கவனிக்க முடிகின்றது.
பைபிளில் படித்த, படிக்கின்ற உண்மைகளை என்னுடன் மட்டும் வைத்துக் கொள்ளக்கூடாது, அது அனைத்து மக்களுக்கும் குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்திற்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காகத் தான் மாற்றங்கள் தேவைவலைப்பகுதி சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல் பல செய்திகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது.
வருடத்தில் டிசம்பர் 25 வந்துவிட்டால் நத்தார் வாழ்த்துக்கள், (marry charismas, X’Mass ) என்று ஆங்காங்கே சத்தங்கள், வீடுகளுக்குள் ஆட்டுத் தொழுவங்களும் அலங்காரங்களும் என்று தொடர்கிறது உலகில் வாழும் கிறிஸ்தவ மக்களின் வாழ்க்கைப் போக்கு.....
கிறிஸ்தவ சமூகத்தை விட்டும் பைபிளை தூரப்படுத்தும் மதகுருமார்கள் (ரபாய்க்கள்) ஒரு புறமிருக்க, மறுபக்கம் பைபிளிய கட்டளை களை படித்து அதில் புதையுண்டிருக்கின்ற, நம்பிக்கைக்கு மாற்றமான பல செய்திகளை கிறிஸ்தவ அறிஞர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
’Shocked by the Bible’ என்ற புத்தகத்தை வெளியிட்ட Joe Kovacs அவர் அதில் சொல்லும் சில செய்திகள் புத்தகத்தின் தலைப்புக் கேற்றாற் போல் அதிர்ச்சியை தருகிறது.
இயேசு கிறிஸ்து வெள்ளிக்கிழமை மரணிக்கவில்லை என்பதை எடுத்துச்சொல்லும் அவர் இயேசு கிறிஸ்து டிசம்பர் 25ல் பிறக்கவில்லைஎன்பதையும் தெளிவாகச் சொல்லுகிறார்.
எல்லாக் காலங்களிலும் விடுமுறையாகக் கொண்டாடப்படும் தினத்தை மக்கள்தெரியாதிருப்பது ஆச்சரியமானது (It's amazing what people don't know about themost popular holiday of all time) என்று ஆச்சரியப்படுகிறார்
உண்மையில் உலகில் வாழும் எல்லாக் கிறிஸ்தியர்களாலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் டிசம்பர் 25 பற்றி அதை கொண்டாடுகின்றமக்கள் கவனம் செலுத்தாமை கவலைக்குரியதாகும்.
புனித பைபிள் முற்று முழுதாக கடவுள் வார்த்தை என்று நம்புகின்ற கிறிஸ்தவமக்கள், அதன் போதனைகளை தான் பின்பற்றி நடக்கின்றோமா? என்பதில் கவனம் செலுத்தாமல் இருப்பது அல்லது தெரிந்து கொண்டு பரவாயில்லை என்று நடந்து கொள்வது பகிரங்க இரகசியமும் பைபிளுக்கு மாற்றமாக நடக்கும் செயலுமாகும்.
இறைமகனாக (God’s son), கடவுள் அவதாரமாக (Cardinal God),கடவுளாக (God) பூமியில் 33 வருடங்கள் வாழ்ந்த இயேசுக் கிறிஸ்து எப்போது பிறந்தார் என்பதைபைபிள் தெளிவாகச் சொல்லுகிறது.
ஆனால் அவரது பிறப்பை கொண்டாட வேண்டும் என்பதை சொல்லாமல்பைபிள் முழுமை பெற்றிருக்கிறது?
பைபிளில் அவரது பிறப்புப் பற்றி பார்க்க முடிகிறது.
”அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான்,கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள்மிகவும் பயந்தார்கள்.”(லூக்கா 2:8 – 9)
அதே செய்தியை இன்னும் தெளிவாக கர்த்தரின் கடைசி வேத நூலாகிய அல்குர்ஆனில் இவ்வாறு பகருகின்றது,
“பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டுசென்றது.
"நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?” என்றுஅவர் கூறினார். "கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்” என்று அவரதுகீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
"பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையானபழங்களைச் சொரியும்” (என்றார்)’ (அல் குர்ஆன் 19 : 23 – 25)
கர்த்தருடைய கடைசி வேதப் பிரதியிலும் அதற்கு முன்னர் நபி ஈசா (அலைஅவர்களுக்கு அனுப்பிய நூலிலும் ஈசா அலை அவர்களுடைய பிறப்புஒரு கோடைகாலத்தில் (mid summer) தான் இருந்தது என்பதைஇன்றுவரை பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
இந்த இரு வேத நூல்களும் சொல்லுவது போல அவர்ஆகஸ்ட் அல்லதுசெப்டம்பர் மாதத்தில் தான் பிறந்திருக்க வேண்டும்.
தமிழில் புரட்டாசி அல்லது எபிரேய மாதமாகிய எத்தானிம் மாதத்திலும் அவரதுபிறப்பை கணக்கெடுக்க வேண்டும்
உங்களுடைய பிறந்த தினத்தை மாற்றி வைத்தால் விரும்புவீர்களா?
இறைமகனாக, கடவுள் அவதாரமாக, கடவுளாக பூமியில் வாழ்ந்த இயேசு (ஈசாஅலை) அவர்களுடைய மரணத்திற்குப் பின் அவர் எப்படி இந்த உலகில்பார்க்கப்பட வேண்டும், எதனை கொண்டாடப்பட வேண்டும் என்பதில்ஏன்கருத்து வேருபாடு?
பிறந்த நாளை கொண்டாடத்தான் வேண்டுமா?
அதற்காக அவர் பிறந்த கோடை காலைத்தை விட்டுவிட்டு நடுப்பனிக்காலத்தில் (Mid winter) அவரது பிறப்பைக் கொண்டாடுவது அவருக்குச்செய்யும் தவறு, அவரது கட்டளைகளுக்கு எதிரான ஒரு செயல் என்று சொன்னால் எந்த தவறும் இருக்காது.
எனது கிறிஸ்தவ நண்பர்கள் கர்த்தருடை கடைசி வேத நூலாகிய அல் குர்ஆனின் பக்கம் திரும்ப வேண்டும், இஸ்லாம் அது தான் கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்ட உண்மையான மார்க்கமாகும்.