அரஃபா நாளில் அரஃபா என்ற மைதானத்தில் ஹாஜிகள் கூடுவார்கள்.
ஹஜ்ஜின் முக்கிய கிரியைகளில் ஒன்றுதான் அரஃபா மைதானத்தில் ஒன்று கூடும் நாளாகும். அரஃபாவில் என்றைக்கு மக்கள் கூடுகிறார்களோ அதுவே அரஃபா தினமாகும். இது வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நிகழும் நிகழ்வாகும். அந்த ஒரு நாளைக்கு பிறகு அந்த வருடத்தில் அரஃபாதினம் என்று எதுவும் கிடையாது. அரஃபா தின நோன்பு என்று நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளதால் அன்றைய தினம் (அரஃபாவில் மக்கள் கூடும் அந்த நாளில்) நோன்பு நோற்பதுதான் சுன்னத்தாகும். இந்நாளில் ஹஜ்ஜுக்கு செல்லாத மற்ற உலக முஸ்லிம்களுக்கு அரஃபா தின நோன்பு மிகவும் வலியுறுத்தப்பட்டதாகும். ஏனெனில்,
'அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பதன் மூலம் ஒருவருடைய கடந்த ஒருவருட கால (சிறிய) பாவங்களும் அடுத்து வரும் ஒருவருட கால (சிறிய) பாவங்களும் மன்னிக்கப்படும் என நான் கருதுகின்றேன்' என நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)