சவூதியில் இலங்கைப் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை.


சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த இலங்கை மாத்தரைப் பகுதியைச் சேர்ந்த எல்.ஜீ ஆரியவதி என்ற பெண்ணை வீட்டின் உரிமையாளரும் அவருடைய மணைவியும் சேர்ந்து கடுமையாக துன்புருத்திய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத் தட்ட 18 ஆணிகளை சூடேற்றி உடலில் ஏற்றி துன்புருத்தியுள்ளனர்.

இவர் தற்போது மாத்தரை அரசினர் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (S.L.T.J) கண்டனம்.

இந்த கொடூரச் செயலை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் கடுமையாக கண்டித்துள்ளது.

மனித நேயத்தை வழியுருத்தும் இஸ்லாமிய மார்க்கத்தில் இப்படிப்பட்ட செயல்பாடுகளுக்கு அணுவளவும் அனுமதியில்லை.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் பாதிக்கப் பட்டவனின் துஆவுக்கு அஞ்சிக் கொள் அவனுடைய துஆவுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் கிடையாது (புகாரி : 1401)

அதாவது ஒரு மனிதன் இன்னொருவனுக்கு ஏதாவது அநியாயம் செய்து விட்டால் அந்த அநியாயத்திற்கு சம்பந்தப் பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் அவர்கள் மன்னித்தால் அல்லாஹ்வும் மன்னித்து விடுவான்.

பாதிக்கப் பட்டவன் மன்னிக்காவிடில் அல்லாஹ்வும் மன்னிக்க மாட்டான் என்பது இஸ்லாமிய அடிப்படை.பாதிக்கப் பட்டவன் மாற்று மதத்தவராக இருந்தாலும் சரியே!

இஸ்லாமிய மார்க்கத்தை பொருத்தவரை எந்த ஒரு உயிரினத்திற்கும் அணியாயம் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

யுத்தத்தில் கூட பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் ஆகியோரை கொள்ளக் கூடாது என்று இஸ்லாம் தெரிவிக்கிறது.

அப்படியிருக்க இந்தப் பெண்மணிக்கு இப்படிப்பட்ட கொடுமை நிகழ்ந்திருப்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கடுமையான செயல்பாடாகும்.

இந்தக் கொடுமையுடன் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் சவூதிய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அத்தோடு பாதிக்கப் பட்ட சகோதரிக்கு உரிய தீர்வையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.
thanks to:rasminmisc.blogspot.com