அயோத்தி தீர்ப்பு வெறும் இடப்பிரச்சனையோ, ஆவணங்களின் ராமனா? பாபரா?அடிப்படையிலான பிரச்சனையோ அல்ல. மக்களின் உயிரோடும் உடமைகளோடும் தொடர்புடையது. எனவே தான் நீதிபதிகள் இடத்தைப் பிரித்துக்கொடுத்து தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள் என்று பார்ப்பன பாசிச கட்டைப்பஞ்சாயத்து தீர்ப்புக்கு சப்பைக்கட்டு கட்டும் இந்துவெறியர்களுக்கு இதைச் சொல்லிக்கொள்கிறோம். தானும் இந்து என்று அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருப்பவர்கள் இதை படித்துப்பார்த்துக் கொள்ளட்டும்.
நீளமான இக்குறிப்புகளை தேடி எடுத்து ஒருங்கே தொகுத்து டிவிட்டரிலும் கூகுளிலும் உலவவிட்டு சாதனை படைத்திருக்கும் தோழர் மணி, தோழர் ஏழரை ஆகியோருக்கு மிக்க நன்றி..! முடிந்தவரை இதை நிறைய பேருக்கு அனுப்பி உண்மை புரிய வையுங்கள்.!!
சுயசரிதை எழுதுவோரின் இளவரசன் என்பதுதான் ஜஹருத்தீன் ஷா பாபருக்கு வழங்கிய பட்டப்பெயர்.
உலக தன் வரலாற்று ஆவணத்தின் உண்மைத்தன்மையில் இலக்கிய தரத்தில் ரூசோவுக்கும், செய்ண்ட அகஸ்டசுக்கும் அடுத்த இடம் பாபருக்குதான்.
தனது பலவீனத்தை தோல்வியை தடுமாற்றத்தை பாபர் போல வேறு எந்த அரசனும் பதிவு செய்யவில்லை.
டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் தனது மகனுக்கு அவர் எழுதிய உயில் காட்சிக்கு உள்ளது.
இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்க பசு மாமிசம் சாப்பிடுவதை தன் மகனை கைவிடச் சொல்கிறார் பாபர்.
மாற்று மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்து விடாதே என்றும் ஹிமாயூனுக்கு எழுதிய உயிலில் பாபர் கூறுகிறார்
திரேதா யுகம் முடிவுக்கு வந்தது கிமு 3102 இல். திரேதா யுகத்தில் பிறந்தவன் ராமன் என்கிறது இந்து மதம், ஆனால் கிமு 700 க்கு முன் அயோத்தியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றே இல்லை என்கிறது அகழ்வாராய்ச்சி.
பௌத்த இலக்கியமான தசரத ஜாதக கதையில் இருந்து இரவல் பெற்றுதான் கிமு 500 இல் வால்மீகி ராமாயணம் எழுதினான்.
ஒரு மனைவியை திருப்திபடுத்த மற்ற மனைவியின் மூத்த மகனான ராமனை காட்டுக்கு அனுப்புவான் தசரதன்.
அவனை அவனது சகோதர சகோதரிகளான லட்சுமணனும் சீதையும் பின்தொடர்வர் என்கிறது அந்த சாதக கதை
தந்தை இறந்த பிறகு வாரணாசிக்கே மீண்டும் வந்து சகோதரி சீதையை மணந்து ஆள்வான் ராமன். சமநிலை பிறழாதவன் என்பதுதான் அவனது சிறப்பு.
வால்மீகி இந்த கதையை சுட்டு இமயமலையை விந்தியமலையாக்கினான். ஆனால் விஷ்ணு அவதாரம் என மறந்தும் அவன் சொல்லவில்லை
சீதை கடத்தப்பட்ட கதை: இலியட் ம் ஓடிசியும் வாய்மொழியாக வணிகத்துடன் இந்தியா வந்தது, வால்மீகி இறந்து 700 ஆண்டுகளுக்கு பிறகுதான் ராமாயணத்தில் ராமன் விஷ்ணு அவதாரம் என சேர்க்கப்படுகிறது # நாகார்ஜூனா
கோசல நாட்டின் முக்கிய நகரங்களாக சரஸவதியும் சாகித்தாவும் திகழ்ந்த்து. அன்றைய அயோத்தி கங்கைகரையில் இருந்தது என்கிறது பௌத்த சமண இலக்கியங்கள்.
தற்போதைய அயோத்தி மேற்கிலிருந்து கிழக்காக பாயும் சரயூ நதிக்கரையில் உள்ளது. வால்மீகி அந்த ஆறு கிழக்கிலிருந்து மேற்காக பாயும் என்கிறான்.
அப்படி ஒரு ஆறு இன்றும் நேபாளத்தில் உள்ளது மக்கள் நடமாட்டம் கிமு 700 ல் ஆரம்பிப்பதற்கு முன் ஆண்டுக்கு 50-60 அங்குல மழை பொழியும் பிரதேசம் அயோத்தி.
அந்த காடுகளை திருத்தி நகரம்அமைக்க இரும்பு பயன்பட்டிருக்க வேண்டும். ஆனால் கிமு 700க்கு முந்திய ஒரு இரும்புதுண்டு கூட அயோத்தியில் சிக்கவில்லை
இதனை ஆர்க்யாலஜிகல் சர்வே ஆப் இந்தியா வெளியிட்ட 1976-77 ரெவியூவில் பக்கம் 52, 53 இல் அறிவியல் சொல்லி உள்ளது #Indian Archeology – Areview 1979-80 page 76, 77 – cofirms the research-done by BB Lal, KN Thetchikth
சரி ராமர் கோவில யார் கட்டுனா என்றால் விகரமாதித்தர் என்கிறார்கள். 1975 இந்திய தொல்பொருள் துறை இயக்குநர் பிபி லால் ஆய்வு வேறு முடிவை தந்தது
விக்ரமாதித்தர் எனப்படும் இரண்டாம் சந்திரகுப்தன் காலம் கிபி 379-413. இன்னோரு விக்ராமாதித்த ஸ்கந்த குப்தன் காலம் கிபி 455-467.
ஆனால் ஆய்வில் அயோத்தியில் குப்தர்கள் ஆண்டதற்கு ஆதாரமே கிடைக்கவில்லை. காரணம், கிபி 300-1100 ல் மனிதர்களே அயோத்தியில் வாழவில்லை
12 ஆம் நூற்றாண்டுக்கு முன் அயோத்தியில் இன்று உள்ளது போல 18 கோயில் என்ன ஒரு கோயில் கூட ராமனுக்கு இல்லை, ஏனெனில் ராமன் அன்று இந்துக் கடவுளாக கூட அங்கீகரிக்கப்படவில்லை.
கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமரசிம்ஹா எழுதிய அமரகோசா என்ற சமஸ்கிருத சொல்லகராதியில் கடவுளர்களின் பெயரில் தப்பித்தவறி கூட ராமன் இல்லை
இந்துக்களின் புனித தலங்களை தனது தீராத் விவேகானி கலாப் இல் பட்டியலிட்ட 11 ஆம் நூற்றாண்டின் லட்சுமிதார் அதில் அயோத்தியை குறிப்பிடவில்லை
எஸ்எஸ் ஐயர் என்ற ஹிந்து அறிஞர் எழுதிய ஆய்வுக்குறிப்பேட்டு புத்தகத்தில் விக்ரமாதித்தன் எழுப்பிய திக்கவா, எர்நாக், சான்சி, பாம்ரா, நாச்னா போன்ற இடங்களை பட்டியலிட்டார். ஏழு அடுக்கும் 84 கருப்பு கசவடி தூணையும் கொண்ட ராமர் கோவிலை அயோத்தியில் விட்டு விட்டார். இல்லையா?
பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ராமனை யாரும் வணங்கவில்லை. பாபரின் சமகாலத்தில் வாழ்ந்த துளசிதாசரின் இந்தி ராமாயணத்திற்கு பிறகுதான், அதுவும் மக்களது கதையாடல்களும் இணைக்கப்பட்டதால்தான் (எந்திரன் ரஜினி போல ஜாக்கி வைத்து) ராமன் தூக்கப்பட்டார்
ராமர் கோவில் இடித்தாக சொல்லப்படும் 1528ல் துளசிதாசருக்கு 30 வயது. சிரிராம சரித்மானஸ் என்ற அவரது காவியத்தில் இதுபற்றி ஏன் அவர்எழுதவில்லை?
இதனை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகன் வரலாற்றாசிரியர் கோபால் கேட்கிறார்.
இதனை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகன் வரலாற்றாசிரியர் கோபால் கேட்கிறார்.
பாபரின் வடிவில் மரண தேவனை அனுப்பியிருப்பதாக தனது கிரந்த சாகிபில் வெளிப்படையாக எழுதியவர் சீக்கிய மதத்தை நிறுவிய பாபரின் சமகாலத்தைய குருநானக்
அவரும் அயோத்திக்கு வந்து பாபர் மஸ்ஜித்தை பார்க்கிறார். ஆனால் எங்குமே பாபர் ராமர் கோவிலை இடித்த்தாக சொல்லவில்லை. பயந்திருப்பார் என்று கூட சொல்ல்லாம். ஆனால் பாபர் இறந்து 9 ஆண்டு கழித்துதான் இறந்தார் குருநானக். அப்போது ஹிமாயூனோ ஒரு அகதியாக திரிந்தான்.
18 ஆம் நூற்றாண்டின் சிப்பாய் கலகம் துவங்கும் வரை அங்கு சைவ மரபு தான் செல்வாக்கில் இருந்த்து. இந்து அறிஞரான ஆர்எஸ் சுக்லா தனது சச்தித்தரர் பரமாணிக் இதிகாஸ் என்ற நூலில் 16 ஆம் பக்கத்தில் பாபர் 500 பிகாசு நிலத்தை அயோத்தி தாண்டதவான் குண்ட கோவிலுக்கு வழங்கியதை குறிப்பிடுகிறார். அதற்கான ஆவணம் அக்கோவிலில் இன்றும் உள்ளது.
குவாலியரில் கோவில் சிற்பங்களை ரசித்ததை தனது சுயசரிதையான பாபர் நமாவில் குறிப்பிட்ட பாபர், ராமர் கோவில் இடிக்கப்பட்டதாக கருதப்படும் மார்ச் 1528 இல் அயோத்திக்கே வரவில்லை என்கிறார் அலகாபாத் பல்கலை வரலாற்றாசிரியர் சுசில் சிறீவத்சவா. அப்போது ஆப்கானிய பட்டாணியர்களுடன் போரிட்டு கொண்டிருந்தார் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆக்ராவில் தங்கி கார்டனிங் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
அயோத்தியின் ஹனுமன் கோவில் மகாந்த் ரகுபர்தாஸ் என்பவர்தான் இன்றுள்ள கட்டுக்கதைக்கு மூலப்புள்ளி
பிஎன் பாண்டே வழிகாட்டலில் செர்சிங் என்பவரது அகழவாய்வில் மசூதி குறித்த தகராறு 1855க்கு முன் இருந்தாக எந்த ஆவணமோ கல்வெட்டோ நூலோ இல்லை
1845 ல் இங்கு வந்த ஆங்கில அதிகாரி சர் ஹென்ரி லாரன்சு இதுபோன்ற தகராறுகளை அவுத் குறித்த புத்தகத்தில் சொல்லவில்லை
1856 ஜனவரியில் பைரகி என்ற வைணவ பிரிவினரால் முசுலீம்களின் அடக்கதலம் அனுமான் குன்றில் அழிக்கப்பட்டது
1856 ஜனவரியில் பைரகி என்ற வைணவ பிரிவினரால் முசுலீம்களின் அடக்கதலம் அனுமான் குன்றில் அழிக்கப்பட்டது
இந்த தகராறு மதவழிபாட்டுதலம் மீதான தாக்குதலுக்கு முசுலீம்கள் வருவதாக தவறாக கணிக்கப்பட்டு ஆங்கிலேய ஜெனரல் அவ்ட்ராம் ஆல் தாக்கப்பட்டனர். மௌலவி அமீர் அலி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார். பிறகுதான் பிரித்தாளும் சூழ்ச்சியை பிரிட்டிசார் புரிந்தனர்
வாரிசிலா கொள்கையை அன்று இந்தியா முழுதும் அமல் ஆகி கொண்டிருந்தது டல்ஹவுசியால். அயோத்தியின் அவுத் மீதும் ஆங்கிலேயருக்கு ஒரு கண் இருந்தது பிப்ரவரியில் அவுத் கிழக்கிந்திய கம்பெனிக்கு வாரிசு இல்லாத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
