சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா ஆயுதம் விற்பனை


அரபு நாடுகளில் ஒன்றான சவுதிக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்காவின் ஒபாமா அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தை சவுதிஅரேபியாவுடன் நடந்து வருகிறது.
 
84 புதியரக எப்.15 ரக போர் விமானங்கள், 70-க்கும் மேற்பட்ட 3 விதமான ஹெலிகாப்டர்கள், கடற்படைக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் வழங்கப்பட உள்ளன.
 
இவை சுமார் ரூ.3 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தற்போது ஈரான் அமெரிக்காவுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டுள்ளது. எனவே எண்னைவளம் மிக்க ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் தயவு அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது. அதற்காகதான் சவுதி அரேபியாவுக்கு அதிநவீன ஆயுதங்களை தாராளமாக வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது என உலகநாடுகள் கருதுகின்றன.